Saturday, August 6, 2022

பங்குனி பொங்கல் 2015 ஊர் குடும்பர், நாட்டாமை, காலாடி அவர்களுக்கு கோவில் பூசாரி மரியாதை செய்தல்

 இருக்கன்குடி கிராமத்தில் தேவேந்திரகுல உறவின் முறையினர் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளி அன்று இரவு 10மணிக்கு மேல் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனை வேண்டி ஊர் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து அம்மனை வணங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க ஊர் நாட்டாமை மற்றும் காலடி தலைமையில் பொதுமக்களை ஒரு திரளாக அழைத்து பெருமாள் கோவில் வழியாக  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சென்று பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது ஊர் நாட்டாமை மற்றும் காலாடிக்கு திருக்கோவில் அறங்காவலர் குழு சார்பாக மரியாதை அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் ஆடி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியானது ஊர் மக்களுக்கு மட்டுமின்றி கோவில் தரிசனத்திற்கு வரும் மக்களுக்கும் கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.

Irukkanguid Panguni Pongal 2015
https://youtu.be/2Q3sf18Bxxw

No comments:

Post a Comment

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருப்பரங்குன்றம் அருள்ம...