Wednesday, August 10, 2022

இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 2022

இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 2022

உலகின் மூத்த தமிழ் குடி யாம் மள்ளர்குடி தெய்வத்திற்கே படியளக்கும் தெய்வேந்தர்களின் வழிவந்த இருக்கண்குடி தெய்வேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சக்காபுக்கா வம்சத்தினர் புதையுண்ட மாரியம்மனை எடுத்து அந்த உக்கிரமான தெய்வத்தை சாந்தப்படுத்தி மகிழ்விக்கும் விதமாக நடுநிசியில் இரத்த பலிகொடுத்து ஊர்பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஊர் குடும்பர் முன்னிலையில் தலைவாசல் முன்பு அறமடம் அமைத்து பக்தர்களுக்கு சேவை செய்து வந்திருக்கிறார்கள். அம்மனுக்கு நித்தியகால பூஜைக்கு ஊர்பொதுமக்கள் அரிசி கொடுத்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.

அந்த நினைவுகள் நடைமுறையாக இன்றளவும் பங்குனிப்பொங்கல் அன்று வீட்டிற்கு ஒரு கைபிடி அரிசி கொடுத்து கோயில் பூசாரிகளால் அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வைத்து படையல் படைக்கப்படுகிறது. இருக்கண்குடி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் அந்த காலத்து வழிபாட்டு முறையை நினைவுபடுத்தும் விதமாக இன்றும் தேவேந்திரர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பங்குனி கடைசி வெள்ளி நடுஇரவு பூஜை நடைபெற்று வருகிறது.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ஈராத்துக்காரியின் நடுநிசி பூஜையான அன்றைய நாளில் இருக்கண்குடி மாரியம்மன் மன மகிழ்வுடன் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பாள்.

அனைவரும் பங்குனிப்பொங்கல் திருவிழா 2022ல் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

01.04.2022 அம்மனுக்கு உகந்த மஞ்சள் நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து அம்மனை மனம் குளிர வைத்து திருவிழா தொடக்கம்

08.04.2022 மாலை ஊர் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், இரவு 10 மணிக்கு மேல் சென்று இரவு 12.00 மணியளவில் நடு ஜாமத்தில் மீண்டும் நடைதிறந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சிறப்பு பூஜை.

09.04.2022 மாலை முளைப்பாரி எடுத்து அலங்காரத்துடன் ஊர்வலம் வந்து அம்மன் கோவிலுக்கு செல்லுதல்

10.04.2022-காலையில் மஞ்சள் நீர் அபிஷேகம் செய்து திருவிழா முடிவடைகிறது. இரவு கலை நிகழ்ச்சிகள்.

அனைத்து மக்களும் பங்குனி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு : இருக்கண்குடி இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்

No comments:

Post a Comment

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருப்பரங்குன்றம் அருள்ம...