Sunday, August 7, 2022

இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கரும்புத் தொட்டில் நேர்த்திக் கடன் செலுத்துதல்

இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கரும்புத் தொட்டில் செலுத்துகிறார்கள்,

எதற்காக இந்த கரும்புத் தொட்டில் செலுத்துகிறார்கள் என்றால் குழந்தை இல்லாத தம்பதியினர் அம்மனை வேண்டி விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற பின் அக்குழந்தையை கரும்புத் தொட்டிலில் வைத்து கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்து நேர்த்திக்கடனை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்நிகழ்வு மேளதாளம் முழங்க ஆற்றுக்கு அருகில் தம்பதியினர் குளித்து மஞ்சள் நீரில் நீராடி அம்மனை மனதார வேண்டி நினைத்து ஆனந்தமாக குழந்தையை கரும்புத் தொட்டிலில் படுக்க வைத்து தம்பதியினர் கரும்புத் தொட்டிலை சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை முடிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குடும்பத்திற்கு ஏற்றார் போல் சிறியதாகவோ அல்லது வெகு விமர்சையாகவும் நடத்தப்படுகிறது.

தினமும் குழந்தை பெற்ற தம்பதியினர் இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

குழந்தை இல்லாத தம்பதியினர் அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வந்து நம்மிடம் முறையிட்டு குழந்தை வரம் கேட்டால் அந்த ஆயிரம் கண்ணுடையாள் குழந்தை இல்லாத தம்பதியினருக்காக குழந்தை வரம் தருவாள்

ஓம் சக்தி!
பராசக்தி!

YouTube


No comments:

Post a Comment

தமிழகத்தில் பள்ளர்கள் முதல் மரியாதை, பரிவட்டம் பெரும் கோவில்கள் எவை ?

பள்ளர் – மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் முதல் மரியாதை செய்யப்படும் கோவில்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் திருப்பரங்குன்றம் அருள்ம...